சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன். இந்த கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் 15 கிலோமீட்டர் தடிமன் வரை வைர படிவங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக சீனாவை சேர்ந்த யாண்ஹோவா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆச்சரிய தகவல் கிடைத்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறி இருக்கலாம் என்றும் அதை மனிதர்களால் பயன்படுத்த முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.