புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்கிறேன்.இதில் திருத்தங்கள் செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ், பேராசிரியர்கள், வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.