மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டங்களுக்கு அரசமைப்பு சட்டத்தை மீறி இந்தியில் பெயர் சூட்டப்பட்டதாக ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டங்களுக்கு பெயர் சூட்டுவது நாடாளுமன்றத்தின் விருப்பம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.