தமிழகத்தில் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தற்போது மீண்டும் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருப்பதாக பலர் புலம்புகின்றனர். விண்ணப்பம் சரிபார்ப்பு நிலையிலேயே இருப்பதால் நலத்திட்ட உதவிகள் பெற முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகிறார்கள்.