புதிய வகை ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ‘நோக்கியா’ தயாரிப்பாளரான HMD நிறுவனத்தின் சி.இ.ஓ ஜீன் பிராங்கோயிஸ் அறிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரெஸ்ட் & கிரெஸ்ட் மேக்ஸ் ரக போன்கள் வெளிநாட்டு சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்கள், உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.