புதுச்சேரியில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்ற அவர், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அங்கு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.