புதுச்சேரியில் நடப்பாண்டுக்கான மதுக்கடை, கள்ளுக்கடைகளுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. கடந்தாண்டுக்கான ஏலம் ஜூலை 1 உடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய கடைகளுக்கு இன்று ஏலம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் 85 மதுக்கடை, 66 கள்ளுக்கடைகள், காரைக்காலில் 23 மதுக்கடை, 26 கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்படுகிறது. மதுக்கடை ஏலம் மூலம் புதுச்சேரி அரசுக்கு அதிகபட்சமாக ரூ.120 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.