புதுச்சேரி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து ஏ.கே ரத்தினவேல் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் மோகன் குமார் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதியை மாற்றக்கோரி போராட்டம் நடத்திய ரத்தினவேல் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுவை பாஜக நிர்வாகிகள் எவரும் ரத்தினவேலுடன் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என மோகன் குமார் தெரிவித்துள்ளார்.