நமது உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களின் ஒன்று தான் புரதம்
நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் முக்கியமான ஒன்று. அதிலும் புரதசத்துக்கள் என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. உடலில் தசைகள் ஆரோக்கியத்திற்கும், எலும்புகள் வலுப்பெறவும் புரதம் கண்டிப்பாக தேவை. இதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரோட்டீன் நிறைந்த பால், முட்டை, மற்றும் பிற அசைவ உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் அனைவரும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டார்கள். சைவ பிரியர்களுக்காகவே இதோ புரோட்டீன் நிறைந்த காய்கறிகளின் லிஸ்ட் இங்கே
புரதம் நிறைந்த காய்கறிகள்:
- பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளில் புரத சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு வலுச்சேர்க்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது.
- இதில் உள்ள பொட்டாசியம், அயர்ன், வைட்டமின்கள் இரத்த சர்க்கரை அளவைக்குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
- ஆரோக்கியம் நிறைந்த சைவ உணவுகளில் மிக முக்கியமானது கீரை. இதில் புரதம், வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் கீரையில் நோயை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது எவ்விதமான உடல் நலப்பாதிப்புகளும் நமக்கு ஏற்படாது.