தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான #SahityaAkademi விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக #BalSahityaPuraskar-க்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்! காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக #YuvaPuraskar-க்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்!” என தெரிவித்துள்ளார்.