சூரரைப் போற்று திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது சுதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.