கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மக்கள் விரும்பி சாப்பிடும் பானிபூரியில் புற்றுநோயை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முழுவதும் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 41 மாதிரிகளில் புற்றுநோய் விளைவிக்க கூடியதாகவும், 18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதி அற்றதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.