பிரபல தொலைக்காட்சி நடிகை ஹினா கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு 3-ம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதாக அறிவித்தார். ஏற்கனவே சிகிச்சை தொடங்கிவிட்டது என்றும் தனக்காக பிராத்தனை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, நாகின் 5, பிக் பாஸ் சீசன் 11, கசௌதி ஜிந்தகி கே, நாகின்-5 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலமாக பிரபலமடைந்தார்.