மழைக்காலத்தில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் அதிகமாக இருக்கும். இவற்றின் தொல்லைகளைத் தவிர்க்க இந்த வீட்டுக் குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்ட சமையலுக்குப் பயன்படுத்தும் புதினா உதவுகிறது. புதினா இலைகளை தண்ணீரில் வேகவைத்து, அந்த தண்ணீரை வீட்டில் தெளிக்கவும். வாஷ் பேசின் பைப் அல்லது வேறு இடங்களில் பூச்சிகள் இருந்தால், புதினா இலைகளை பேக்கிங் சோடாவுடன் பிசைந்து அந்த இடங்களில் தடவி விடலாம். இதில் இருந்து வெளியேறும் வாசனை பூச்சிகளைக் கொல்லும்.