மகாராஷ்டிரா மாநில கேடர் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய பெற்றோர் மனோரமா கேத்கர், திலீப் கேத்கர் மற்றும் 5 பேர் மீது புனே ரூரல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மனோரமா கேத்கர் தன்னை மிரட்டியதாக உள்ளூர் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். இவர் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. ஆயுதச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.