பதுக்கல் அதிகரித்துள்ளதால் பூண்டு விளை கிலோ 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த நிலையில் விவசாயிகள் இடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வர்த்தகர்கள் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.