தமிழகத்தில் ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% மானியத்தில் 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவர் கல்லூரியில் மாணவியருக்கு விடுதி கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.