2 கோடி ரூபாய் மானியத்தில் 200 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வழங்கப்படும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையின் பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. பெண்களின் சுய தொழில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க இந்த புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.