இந்தியாவை 3ஆவது பொருளாதார நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி, 140 கோடி இந்தியர்களின் அன்பை பகிர்ந்துகொள்ளவே, ரஷ்யா வந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என உறுதியேற்றுள்ளதாக தெரிவித்த அவர், 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு என்றார்.