எந்த ஆவணமும் இல்லாமல் எவ்வளவு தங்கம் கையில் வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நேரடி வரிகள் ஆணைய விதியில் கூறப்பட்டுள்ளது. திருமணமான பெண் என்றால் 500 கிராம், திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் 100 கிராம் வைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இருந்தால் இரு பாலரும் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வைத்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.