தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலம் உருவாக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.