மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 37 வயது பெண்ணை கொலை செய்து உடல் உறுப்புகளை 2 ரயில்களில் போட்டுச் சென்ற கமலேஷ் படேல் (60) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கணவருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வந்த பெண், உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நிலையில் அது முடியாததால் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் கால்கள் மற்றும் கைகள் உத்தராகண்டிலும், மீதமுள்ளவை இந்தூரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.