சென்னையில் 4-வது ரயில் முனையம் வில்லிவாக்கத்திற்கு பதிலாக பெரம்பூரில் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.சிங், “சென்னை வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமிடல் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.