சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகன்நாதன் மீது ஊழல் புகார்கள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவரது பதவியை நீட்டிக்க விடாமல் தமிழக அரசு தடுக்கும் என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்நிலையில், அதையும் மீறி ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டடுள்ளது.