சிபிஐ காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறை அதிகாரிகள் தனது பெல்ட்டை எடுத்துக்கொண்டதால், பேன்ட்டை கையால் பிடித்து நடக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், இந்த தர்மசங்கடத்தை புரிந்துகொண்டு விதியில் தளர்வளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்ற, நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.