பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசுவதற்கு தனக்கு 5 நிமிடம் கூட வாய்ப்பளிக்கவில்லை என்றும், மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்குமாறு கேட்டபோது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் சாடினார்.