கேரளாவில் அரசு பேருந்து ஒன்று காட்டு வழிப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை நின்றிருந்துள்ளது. அதனைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த யானை பேருந்தை நோக்கி வர தொடங்கியது. இதனால் ஓட்டுநரும் பேருந்தை பின் நோக்கி இயக்கினார். தொடர்ந்து அந்த யானை விரட்டியதால் பேருந்தில் இருந்த பயணிகள் பதறினர். பிறகு யானை காட்டுக்குள் சென்றதும் பேருந்து இயக்கப்பட்டது.