தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி பகுதியில் பைக்கும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோனிஷ் (9), ராதிகா (30), விக்னேஷ் (18) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராதிகா தனது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருக்க, எதிரே விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றிய விசாரித்து வருகின்றனர்.