தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்ததை தொடர்ந்து இன்று காலை 11:00 மணி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த கலந்தாய்வு குறித்த விவரங்களை https://www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் அறியலாம்.