இனி தன்னை பொற்கொடி என்று அழைக்க வேண்டாம் என்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று அழைக்குமாறும் மறைந்த பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அவர் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் பெயரை நினைவூட்டவே இவ்வாறு மாற்றியதாகக் கூறினார்