அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர்களுக்கும் சேர்த்துதான் தோல்வி கிடைத்துள்ளது. அதிமுக தலைமையின் பேச்சை அக்கட்சியினர் கேட்காததற்கு விக்கிரவாண்டி தேர்தலே சிறந்த உதாரணம் என சாடிய அவர், இந்த வெற்றி 2026க்கு அடித்தளமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.