தமிழகத்தில் ஆண்கள் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் உள்ள நபர்கள் பெரும்பாலும் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போதை மாத்திரைகளை பெண்களும் பயன்படுத்தி வருவதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழு அமைத்து அவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதும் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் 16 முதல் 20 வயதுடைய சிறுமிகள் தவறான பழக்கவழக்கத்தால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆண் நண்பர்களுடன் இணைந்து போதை மாத்திரைகளை உட்கொள்ளும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து நாசம் செய்து விடுகின்றனர். அதே சமயம் கடந்த சில மாதங்களில் 16 வயதுடைய சிறுமிகள் போதை மாத்திரைக்கு அடிமையாகி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது