கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜினு (36) கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். பிறகு மறுமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அது கைகூடவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் மதுபோதைக்கு அடிமையானார்.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஜினு தந்தை செல்வராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் செல்வராஜ் ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் தேங்காய் உரிக்கும் கம்பியால் அடித்துக் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.