பிரேசிலின் ரியோ டி ஜெனரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில் அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதை பொருள் கலப்பு கண்டறியப்பட்டுள்ளதாகஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் போதை பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இப்படி நிகழ்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் சுறா மீன்கள் கடலில் போதையில் மிதப்பதாக கூறப்படுகிறது