ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிசை பிரதமர் மோடி ஆரத் தழுவினார். ஜி 7 கூட்டமைப்பின் கூட்டத்தில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களை போப் வாழ்த்தினார்.