இத்தாலியில் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிசை பிரதமர் மோடி ஆரத் தழுவினார். ஜி 7 கூட்டமைப்பின் கூட்டத்தில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களை போப் வாழ்த்தினார்.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டின்போது, போப் பிரான்சிசை சந்தித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். அதில், “மக்களுக்கு சேவை செய்வதற்கும், நமது பூமியை மேம்படுத்துவதற்கும் போப் பிரான்சிஸ் காட்டும் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது. போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.