அமெரிக்க வரலாற்றிலே இல்லாத அளவிற்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் பெருமிதமாக கூறியுள்ளார். அட்லாண்டாவில் ஜோ பைடனுடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் பேசிய அவர், “கொரோனா காலத்திலும் எந்த பிரச்சினையும் இன்றி சிறப்பான ஆட்சியை நடத்தினேன். போருக்காக செலவிடாமல், மக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் & வளர்ச்சிப் பணிகளுக்கு நிறைய செலவிட்டேன்” என்றார்