ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்தியதாக கூறும் மோடி நீட் தேர்வு வினாத்தாள் கசிவை ஏன் தடுக்கவில்லை? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகள் குறித்து பேசி அவர் வினாத்தாள் கசிவால் மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளதால் தான் நாங்கள் சாலையில் இறங்கி போராடுகிறோம் என்றார். மேலும் இந்த வினாத்தாள் கசிவுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.