பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஓலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் அதற்கு உடனடியாக சிகிச்சை அளித்ததையடுத்து தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.