பிரதமர் மோடி, இந்தியா-ரஷ்யா இடையிலான வருடாந்தர உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்றுள்ளார். அதிபர் புடின் அளித்த விருந்தில் பங்கேற்ற பின் அவருடன் பேசிய மோடி, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை உள்ளிட்ட ஐநா சாசனத்துக்கு மதிப்பளிக்க வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் போர்க்களத்தில் தீர்வுகள் உருவாகாது என்றும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது