தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கரை அருகே பாலமுருகன் என்பவர் பேராவூரணி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை சிறைச்சாலைக்கு குற்றவாளியை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த பாலமுருகன் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமீபகாலமாக பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் கூடுதல் பணி சுமையால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.