புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என, அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுவரை 1.15 கோடி பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், உரிமைத்தொகை கோரும் 1.48 லட்சம் புதிய மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்