தமிழகம் முழுவதும் உள்ள இளம் மகளிர்க்கு மத்திய அரசு உத்தரவுபடி கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த பதிலுரையில் பேசிய அமைச்சர், மகளிர் இளம் பருவத்தினருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு தடுப்பூசிகளை தருவதாக கூறியுள்ளனர். விரைவில் மாநிலம் முழுதும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என கூறிஉள்ளார்.