சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் 21 முதல் 60 வயது உடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய், ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.