தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு நாங்கள் படாத பாடு படுகிறோம் என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதவித்தொகை கிடைக்காத சில பெண்கள், விழாக்களுக்குச் சென்றால் எங்களை படுத்தும் பாட்டில் இருந்து தப்பித்து ஓடி வருவதே பெரும் பாடாக உள்ளது. அதுவும் கிராமப்புற பெண்கள் தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கூறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.