மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்கில் ஜூலை 15ஆம் தேதி ரூ,1000 செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு தேர்வானவர்களின் வங்கிக் கணக்கு சரியானது தானா என்பதை உறுதி செய்யும் வகையில், நாளை (ஜூலை 14) ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்படும் என தெரிகிறது.