கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பித்தோரில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக மீண்டும் மேல் முறையீடு செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெற மேல்முறையீடு செய்தோரில், 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்படும் இத்திட்டம் மூலம் 2.50 லட்சம் பெண்கள் பயனடைவர் எனக் கூறப்பட்ட நிலையில், 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.