மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை அவர் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். கடந்த 2021 ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட அவர், இந்த முறை பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.