உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக இணைந்து ஜூஸ் குடித்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரருடன் இணைந்து சிறுவனை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
பிறகு சிறுவனின் பெற்றோருக்கு ஃபோன் செய்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பண்ணை வீட்டில் இருந்து சிறுவனை மீட்ட போலீசார் சிறுமியின் தந்தை, அவரது சகோதரரை கைது செய்தனர். மேலும் அந்த சிறுவன் சிறுமியை கட்டாயப்படுத்தியதாக அவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.