மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக கூட்டணி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றுள்ளது.